தமிழகம் உட்பட 21 போலி பல்கலைகள்: யு.ஜி.சி., எச்சரிக்கை

பல்கலைக்கழக மானிய குழுவான யு.ஜி.சி., வெளியிட்டுள்ள செய்தி: உ.பி., ம.பி., டில்லி, பீகார், கர்நாடகா, கேரளா, தமிழகம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில், 21 போலி பல்கலைக் கழகங்கள் இயங்குகின்றன.

         அவற்றில், உ.பி., முதலிடத்தை பெற்றுள்ளது. போலி பல்கலைக் கழக பட்டியலில், தமிழகம், திருச்சி மாவட்டத்தில் உள்ள, புத்தூரில் இயங்கும் டி.டி.பி., சமஸ்கிருத பல்கலைக் கழகமும் இடம் பெற்றுள்ளது. இந்த பல்கலைக் கழகங்களில் இருந்து பெற்ற சான்றிதழ்கள் செல்லாது. எந்தவொரு வேலைக்கும், அந்த சான்றிதழ் பயன்படாது.