மார்ச் 2015, மேல்நிலைத் தேர்வு விடைத்தாள் நகல் கோரியும், மறுகூட்டல் செய்யக் கோரியும் 08.05.2015 (வெள்ளிக்கிழமை) முதல் 14.05.2015 (வியாழக்கிழமை) வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.பள்ளி மாணாக்கர் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்

01.மார்ச் 2015, மேல்நிலைத் தேர்வுமுடிவுகள் 07.05.2015 (வியாழக்கிழமை) முற்பகல் 10.00 மணிக்கு வெளியிடப்பட்டது.. தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு, பள்ளி மாணாக்கர் (மற்றும்) தனித்தேர்வர்களாகத் தேர்வெழுதியோர் விடைத்தாள் நகல் கோரியோ அல்லது மதிப்பெண் மறுகூட்டல் கோரியோ
விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கோரியும், மறுகூட்டல் செய்யக் கோரியும் 08.05.2015 (வெள்ளிக்கிழமை) முதல் 14.05.2015 (வியாழக்கிழமை) வரை (ஞாயிற்றுக்கிழமைதவிர) விண்ணப்பிக்ககால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணாக்கர் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் வகையில் பள்ளித்தலைமைஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.

02.மாணவர்கள் விடைத்தாள் நகல்கோரியோ அல்லது மதிப்பெண் மறுகூட்டல் கோரியோ போகும்  பொழுது, ஒருபடிவத்தை அளிக்கவேண்டும். அப்படிவம் பள்ளியிலும் வழங்கப்படும்.

03.எந்தெந்தபாடங்களுக்குவிடைத்தாளின் நகல்தேவை? எந்தெந்த பாடங்களுக்கு மறுகூட்டல் மட்டும் தேவை? போன்ற விவரங்களை மாணவர்கள் பூர்த்தி செய்து  கொடுக்க வேண்டும். 

04.விடைத்தாள்நகல்ம ற்றும் மறுகூட்டலுக்குரிய தொகையினை பணமாக கொடுக்க வேண்டும்.

 05.விடைத்தாளின் நகல் (Copy of the answer sheet)-

  1. கட்டணம் பகுதி– I மொழி - ரூ. 550/-
  2. பகுதி - II மொழி (ஆங்கிலம்) - ரூ. 550/-
  3. ஏனையப் பாடங்கள் - ரூ. 275/- (ஒவ்வொன்றிற்கும்)


06. மறுகூட்டல் (Re- totaling)  கட்டணம்:

  1. பகுதி– I  மொழி , பகுதி - II மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் (ஒவ்வொன்றிற்கும்)- ரூ.305/-  
  2. ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-


07.விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பிக்கும் பாடங்களுக்கு தற்போது மறுகூட்டலோ (அல்லது) மறுமதிப்பீட்டிற்கோ விண்ணப்பிக்கக் கூடாது. 

08.விடைத்தாள்நகல் பெற்ற பின்னரே மதிப்பெண் மறுகூட்டலுக்கு/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

09.விடைத்தாள்நகல்தேவையில்லையெனில், மாணவர் விரும்பினால் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம்.

10.மாணவர்களிடமிருந்து பூர்த்தி செய்தபடிவத்தையும், கட்டணத் தொகையினையும் பெற்றவுடன், இணையதளத்தில் அவ்விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

DOWNLOAD APPLICATION FOR RETOTAL AND COPY OF ANSWER SCRIPTS