அரசு பள்ளிகளுக்கு 15ம் இடம் 11 சதவீத மாணவர்கள் 'பெயில்'

பத்தாம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கடந்த ஆண்டை விட, 3.36 சதவீதம் உயர்ந்துள்ளது. இருப்பினும், தேர்ச்சிப் பட்டியலில், 15ம் இடத்திலேயே உள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த, 11 சதவீத பேர் தேர்ச்சி பெறவில்லை.

முதலிடத்தில் மெட்ரிக் பள்ளிகள்; இரண்டாம் இடத்தில் ரயில்வே; மூன்றாம் இடத்தில் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசு பள்ளிகளை விட, மாநகராட்சி பள்ளிகள் முன்னேறி, கடந்த ஆண்டை விட, 1 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்று, 11வது இடத்தில் உள்ளன. ஆதிதிராவிடர் பள்ளிகள், பழங்குடியினர் பள்ளிகள் தேர்ச்சிப் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளன.