இன்ஜினியரிங் விண்ணப்பம்: 1.43 லட்சம் விற்பனை

சென்னை: அண்ணா பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், இன்னும் ஒரு லட்சமே உள்ளன. இதுவரை, 1.43 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. அண்ணா பல்கலை மற்றும்
தமிழகத்தில், 59 மையங்களில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள், மே, 6ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. வரும், 27ம் தேதி வரை, 59 இடங்களிலும், 29ம் தேதி வரை அண்ணா பல்கலையிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகிறது.வரும், 29ம் தேதி வரை, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம். முதல் நாளில், 58,600 விண்ணப்பங்கள் விற்பனையாகின. நேற்று மாலை, 5:00 மணி வரை, 12,357 விண்ணப்பங்கள் விற்பனையாகின. இதுவரை மொத்தம், ஒரு லட்சத்து, 43 ஆயிரத்து, 555 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளதாக, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தம், 2.40 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.