எம்.பி.பி.எஸ்.,விண்ணப்ப வினியோகம் எப்போது?

சென்னை:'எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான விண்ணப்பம் வினியோகிக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என, மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளும்; ஒரு அரசு பல் மருத்துவக் கல்லுாரியும்

உள்ளன. இதில், 2,176 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.
இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், மே 11, 12ம் தேதிகளில் துவங்கும் என, தகவல் வெளியானது.இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த ஆண்டு, மே 14ல், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகத்தை துவக்கினோம். இந்த ஆண்டு எப்போது தருவது என, இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதைப் பொறுத்தே, விண்ணப்ப
வினியோக தேதியை முடிவு செய்வோம்' என்றார்