தொகுப்பூதியம் பெறுவோருக்கு தனிப்பட்ட தொகை உயர்த்தி அறிவிப்பு

தொகுப்பூதியம் பெறுவோருக்கு, தனிப்பட்ட தொகையாக, மாதத்திற்கு 20 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அரசு அலுவலர்களுக்கு, ஜனவரி 1ம் தேதியில் இருந்து, அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே,
திருத்தப்பட்ட தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு, ஜனவரி 1ம் தேதியில் இருந்து, தனிப்பட்ட தொகையை உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.  
              அதன்படி, 2006 ஜனவரி 1ம் தேதியில் இருந்து, மாதத்திற்கு, 600 ரூபாய் வரை தொகுப்பூதியம் பெறுவோருக்கு, மாதம், 20 ரூபாய்; 600 ரூபாய்க்கு மேல் திருத்தப்பட்ட தொகுப்பூதியம் பெறுவோருக்கு, மாதம், 40 ரூபாய் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான, தனிப்பட்ட நிலுவைத் தொகை, உடனடியாக ரொக்கமாக வழங்கப்பட வேண்டும். உள்ளாட்சிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கீழ் பணியாற்றும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கும், இந்த ஆணை பொருந்தும் என, நிதித் துறை செயலர் சண்முகம் பிறப்பித்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.