சென்னை: 'மாணவர்களை கண்டித்து, திருத்தும் உரிமையை ஆசிரியர்களுக்கு, அரசு
வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை
மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம் கேட்டுக்
கொண்டுள்ளது.சங்கத்தின், வெள்ளி விழா மாநாடு, சென்னை காமராஜர் அரங்கில், நேற்று நடந்தது; கவர்னர் ரோசையா சிறப்புரையாற்றினார். சங்க தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார்; பொதுச் செயலர் நந்தகுமார், துணைத் தலைவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், உடனடியாக அங்கீகாரம் வழங்க வேண்டும்.
* 'ஆன் - லைன்' மூலம் அங்கீகாரம் வழங்குவதோடு, ஐந்து ஆண்டுகள் வரை அங்கீகாரம் அளிக்க, வல்லுனர் குழு அளித்த பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.
* அங்கீகாரம் பெற்று, 10 ஆண்டுகளான அனைத்து பள்ளிகளுக்கும், நிரந்தர அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.
* பள்ளிகள் இருக்கும் பகுதியை கருத்தில் கொள்ளலாம்; அனைத்துப் பகுதி பள்ளிகளுக்கும், 6 கிரவுண்ட் நிலம் போதுமானது என, உத்தரவிட வேண்டும். இதற்கு குறைவாக உள்ள பழைய பள்ளிகளுக்கு, நில விதிமுறையில் விலக்கு அளிக்க வேண்டும்.
* தரம் உயர்த்த விண்ணப்பித்துள்ள, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும். 2010க்கு முன், விதிமீறி கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களை, தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
* அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும், இலவச நோட்டு புத்தகம், சைக்கிள், லேப் - டாப், தேர்வு கட்டண சலுகை, கல்வி உதவித்தொகையை, தனியார் பள்ளி மாணவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
* புத்தக விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
* எட்டாம் வகுப்பு வரை, கட்டாய தேர்ச்சி என்ற முறையை நீக்க வேண்டும்.
* தவறு செய்யும் மாணவர்களை கண்டித்து திருத்தும் உரிமை, ஆசிரியர்களுக்கு இல்லை; இதனால், வகுப்புகள் அமைதியற்ற நிலையில் உள்ளன.
* மாணவர்களின் நல்லொழுக் கம், நற்பண்புகள் குறைகின்றன. இந்நிலை மாற, மாணவர்களை கண்டிக்கும் உரிமையை, ஆசிரியர்களுக்கு அரசு வழங்க வேண்டும்.
* சிறுபான்மை மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்; சிறுபான்மை பள்ளிகளுக்கான சான்றுகளை, உடனடியாக அளிக்க வேண்டும்.
* கல்விபெறும் உரிமை சட்டத்தின் கீழ், சேர்க்கப்பட்ட மாணவர்களுக்காக, அரசு, 150 கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இத்தொகையை உடனடியாக வழங்கவில்லை எனில், 2015 - 16 கல்வியாண்டில், இச்சட்டத்தின் கீழ், மாணவர்களை சேர்க்க மாட்டோம்.
* ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும்; பள்ளி பஸ்களுக்கு, மாநிலம் முழுவதும் செல்ல, 'பர்மிட்' கொடுக்க வேண்டும்.
* அரசு வசூலிக்கும் கல்வி வரியை, தனியார் பள்ளிகளுக்கும் செலவிட வேண்டும்; அனைத்து வகைப் பள்ளிகளுக்கும், ஒரே இயக்குனரகம் அமைக்க வேண்டும்.
* சி.பி.எஸ்.சி.இ., பள்ளிகளுக்கு, மாநில அரசிடம் தடையில்லா சான்று பெறும் முறையை ரத்து செய்யவேண்டும்.
* பள்ளிகளில், தேசிய பள்ளிக் கல்வி முறை பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.