தமிழகத்தில் கல்வித் துறை சிறப்பாகச் செயல்படுகிறது

தமிழகத்தில் கல்வித் துறை சிறப்பாகச் செயல்படுகிறது என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கதேரியா தெரிவித்தார்.
சென்னை குருநானக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "குரு ஹர்க்ரிஷண்' என்ற புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.



பின்னர், செய்தியாளர்களிடம் ராம் சங்கர் கதேரியா பேசியது: இந்தியா முழுவதும் மாணவிகள், பெண்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பெற்றோர்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேரும் வகையில், அரசு பள்ளிகளின் கல்விமுறையை மேம்படுத்த ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். ஆகிய நிறுவனங்களில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், குருநானக் கல்லூரி கல்வியியல் அறக்கட்டளை தலைவர் ஹர்பன்ஸ் சிங் ஆனந்த், கல்லூரி முதல்வர் எம்.செல்வராஜ், கல்லூரி தாளாளர் மஞ்சித் சிங் நயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்