நர்சு பணிக்கு 7,000 பேர் தேர்வு:ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனைகளுக்கு, கூடுதலாக நர்சுகள் தேவைப்படும் நிலையில், புதிதாக, 7,243 பேரை சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, தகுதித் தேர்வு, ஜூன் மாதம்
நடக்கிறது.

அதனால், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், புதிதாத டாக்டர்கள் மற்றும்சிறப்பு பிரிவு டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இதன்படி, 2,176 டாக்டர்கள், 400க்கும் மேற்பட்ட சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கு, கலந்தாய்வு மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், பணியில் சேர்ந்து வருகின்றனர். டாக்டர்களை தொடர்ந்து, 7,243 நர்சுகளை பணியில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது. இதில், 451 பேர் ஆண்கள்.மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், இந்த நர்சுகள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான முறையான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.'மே மாதம், 11ம் தேதிக்குள், ஆன்-லைன் வழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு, ஜூன், 28ல் நடக்க உள்ளது. மேலும் விவரங்கள் தேவைப்படுவோர்,www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்' என, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதன்பின், மருந்தாளுனர், மருத்துவ உதவியாளர் என, மருத்துவம் சார் பணியாளர்களையும் எடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.