ஒரே நாளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் பணிக்கு 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4,362 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்து
றை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. குறைந்த பட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும்.
இதற்காக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவித்துள்ள நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் பலர் விண்ணப்பித்தனர். விண்ணப்பிக்க மே 6-ந்தேதி கடைசி நாள். நேற்று ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31-ந்தேதி நடைபெற உள்ளது.