12–ம் வகுப்பு மெட்ரிகுலேசன் பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு தயார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் அறிவிப்பு

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளில் 2015–16–ம் கல்வி ஆண்டில் 12–ம் வகுப்பு படிக்க உள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தமிழ்நாட்டு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவை கழகத்தால் அச்சிடப்பட்டு அந்தந்த வட்டார அலுவலகங்களில் விற்பனை பிரதியாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர்கள் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட வட்டார அலுவலகத்தில் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடப்புத்தகங்களுக்கு உண்டான தொகையினை வங்கி வரைவோலையாக செலுத்தி, விற்பனை பிரதியை பெற்றுக்கொள்ளவும்.
அதனை உடனடியாக மாணவர்களுக்கு விநியோகிக்கவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளிலேயே 12–ம் வகுப்பு பாடப்புத்தகங்களை விற்பனை பிரதியாக பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.