மருத்துவ படிப்பில் சேர மே 11-ந்தேதி முதல் விண்ணப்பம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க மே 29-ந்தேதி (மாலை 5 மணி வரை) கடைசி நாள் . இந்த ஆண்டும் ஜூன் 19-ந்தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவ படிப்பில் சேர மே 11-ந்தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் 2,555 இடங்கள் உள்ளன மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே 11-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது. அரசு

மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 2,555 இடங்கள் உள்ளன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு மே 7-ந்தேதி வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேருவதற்கு 2,555 இடங்கள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம், அதாவது 383 இடங்கள் ஆகும். இந்த இடங்கள் போக மீதமுள்ள 2,172 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரலாம்.ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரிதனியார் மருத்துவக்கல்லூரிகள் 12 உள்ளன. இந்த ஆண்டு தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கான இடங்கள் இன்னும் முடிவாகவில்லை. அரசு மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். சேருவதற்கு 2,555 இடங்கள் இருந்தாலும், புதிதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அந்த கல்லூரியை இந்திய மருத்துவ கவுன்சிலை சேர்ந்த குழு வந்து ஆய்வு நடத்திவிட்டு சென்றுள்ளது. மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பம் வழங்குவது குறித்து மருத்துவக்கல்வி தேர்வுத்துறை செயலாளர் டாக்டர் சுகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-மே 11-ந்தேதி முதல் விண்ணப்பம்எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்குவது குறித்து மே 10-ந்தேதி அறிவிப்பு வெளியாகிறது. அதன்பின்னர், விண்ணப்பம் மே 11-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் வழங்கப்படும்.பல் மருத்துவப்படிப்புக்கான விண்ணப்பம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரியில் வழங்கப்படும். விண்ணப்பம் மே 28-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க மே 29-ந்தேதி (மாலை 5 மணி வரை) கடைசி நாள் ஆகும்.விண்ணப்ப படிவங்கள் கடந்த ஆண்டை போலவே இந்தஆண்டும் ரூ.500-க்கு விற்கப்படும். ஆனால் ஆதிதிராவிடர், பழங்குடி இன மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் சாதி சான்றிதழுக்கான ஜெராக்ஸ் கொடுத்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.தரவரிசை பட்டியல்கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பிப்பார்கள் என்று தெரிகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு 7-ந்தேதி வெளியானாலும், விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிந்த பிறகு இறுதி மதிப்பெண் பட்டியலை அரசு தேர்வுத்துறை சி.டி. வடிவில் எங்களிடம் ஒப்படைக்கும்.அதன்பின்னர் தான் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 12-ந்தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிட உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு டாக்டர் சுகுமார் கூறினார்.இந்த பேட்டியின்போது, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஜூன் 19-ந்தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.