பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சில டிப்ஸ்.....
படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்க
ள்.
• படிக்கும் இடம் சிறியதாக இருந்தாலும், எந்த வகையிலும் கவனத்தை திசை திருப்பக் கூடியதாக இருக்கக் கூடாது.
• பகலிலும், இரவிலும் போதுமான வெளிச்சம் உள்ள இடமாக இருக்க வேண்டும்.
• நல்ல காற்று வசதி உள்ள இடமாக இருக்க வேண்டும்.
• படிக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
• உங்களது அறையில் தொலைக்காட்சிப்பெட்டி, வானொலிப் பெட்டி, தொலைபேசி போன்றவைகள் இல்லாமல் இருந்தால், கவனம் சிதறாது.
• நீங்கள் படிப்பதற்குத் தேவையான அனைத்து புத்தகங்களும், நோட்டுப்
புத்தகங்களும் பிற பொருட்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். பொருட்களைத்
தேடுவதற்காக அதிக நேரத்தைச் செலவழிக்காதீர்கள்.
• படிக்கும் இடத்தில் படுக்கை இருப்பதைத் தவிர்க்கவும். படுக்கை இருந்தால் படுத்துக் கொண்டே படிக்கலாம் என்று எண்ணம் தோன்றும்.
• குழந்தைகள், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நீங்கள் படிக்கும் இடத்திற்கு வந்து போகும் இடமாக இருக்கக் கூடாது.
• இரவில் குடிப்பதற்கு படிக்கும் அறையிலேயே தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.
• காலையில் எழுந்தவுடன் உங்கள் அறையிலேயே சிறிது நேரம் யோகா அல்லது தியானம் போன்றவற்றில் ஈடுபட்டால் நினைவு திறன் அதிகரிக்கும்.