வனவர் தேர்வு: 'கீ ஆன்சர்' வெளியீடு

வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, நடந்த தேர்வுக்கு, விடைக் குறிப்பு (கீ ஆன்சர்) வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டு உள்ள அறிக்கை: வனத்துறை மற்றும் வனக் கழகங்களில் காலியாக
உள்ள வனவர், கள உதவியாளர் பதவிகளுக்காக, பிப்., 22ம் தேதி நடந்த போட்டித் தேர்வில், பொது அறிவுக்கான வினாத்தாள் ஒன்று, பொது அறிவியலுக்கான வினாத்தாள் இரண்டு ஆகியவற்றுக்கான, விடைக் குறிப்பு, www.forests.tn.nic.in என்ற இணையதளத்தில்
வெளியிடப்பட்டு உள்ளது. விடைகள் குறித்து, மாற்றுக் கருத்து இருப்பின், அரசு அங்கீகரித்த ஆதாரங்களுடன், எழுத்துப் பூர்வமாக, இம்மாதம், 13ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், தேர்வு குழுமத்துக்கு அனுப்ப வேண்டும். tnfusrc.tnchn@.nic.in என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம். சரியான விடைகள், இணையதளத்தில் இறுதியாக வெளியிடப்படும். மதிப்பெண் மற்றும் தகுதிப் பட்டியல், இதன்பின் இணையத்தில் வெளியாகும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.