மலிவு விலையில் பன்றி காய்ச்சலுக்கு சோதனை மருந்து கண்டுபிடிப்பு

புதுடில்லி: பன்றிக்காய்ச்சல் பரிசோதனைக்கான செலவு மிகவும் அதிகமாக உள்ள நிலையில் குறைந்த விலையில் நோய் பரிசோதனைக்கான கருவியை பெங்களூரு மருந்து நிறுவனம்ஒன்று கண்டுபிடித்து உள்ளது.

பெங்களூருவில் உள்ள 'மோல்பயோ' என்ற நிறுவனம் பன்றிக்காய்ச்சல் நோய்இருக்கிறதா என்பதை கண்டறியும் கருவி மற்றும் அதற்கான பரிசோதனை மருந்தைகண்டுபிடித்து உள்ளது; இதை ஒருமுறை பயன்படுத்த 850 ரூபாய் தான் ஆகும்.இதற்கான கருவி மற்றும் மருந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதை பயன்படுத்தி நோய் ஆய்வு மேற்கொள்ள அதிகபட்சம், 3,000 ரூபாய் வரை ஆகிறது.பன்றிக்காய்ச்சல் நோய் இருப்பதை கண்டறிவதற்கான மருத்துவ சோதனை மருந்துகளை சுவிட்சர்லாந்தின் ரோச் மருந்து நிறுவனமும், அமெரிக்காவின் 'லைப் டெக்னாலஜிஸ்'நிறுவனமும், இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.பன்றிக்காய்ச்சலுக்கு குறைந்த விலையில், இந்திய நிறுவனம் சோதனை மருந்தை கண்டுபிடித்துள்ள போதிலும் அதை பயன்படுத்த ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. இதனால் குறைந்த விலையில் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பை கண்டறிய முடியாத நிலை ணப்படுகிறது.இந்த நோய்க்கு நாடு முழுவதும் 1,175 பேர் இறந்துள்ளதாக, மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.