பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ்(தத்கல்)
விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் சனிக்கிழமை முதல் தேர்வுக்கூட அனுமதிச்
சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள்
இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பத்தாம் வகுப்புத் தேர்வை சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் எழுத
விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை
மார்ச் 7-ஆம் தேதி முதல் ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்யலாம்.
தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து ஹால்
டிக்கெட்டைத் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம். மார்ச் 11-இல் செய்முறைத்
தேர்வு: இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு மார்ச்
11-ஆம் தேதியன்று அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட், அறிவியல் செய்முறை பதிவேடு ஆகியவற்றுடன்
தாங்கள் ஏற்கெனவே அறிவியல் செய்முறை பயிற்சி பெற்ற பள்ளியிலேயே செய்முறைத்
தேர்வில் பங்கேற்க வேண்டும்.
ஹால் டிக்கெட், செய்முறைத் தேர்வு குறித்து இந்தத் தேர்வர்களுக்கு
தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.