பொருளியல் வினாத்தாளில் குளறுபடி: மாணவர்கள் குழப்பம்

          பிளஸ் 2 பொருளியல் வினாத்தாளில் 'புளு பிரின்ட்' படி கேள்வி கேட்காததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரு மதிப்பெண் வினாவில் 18, 20 வது கேள்விகள் தவறாக, குழப்பமாக கேட்கப்பட்டிருந்தன. மூன்று மதிப்பெண்ணில் 53 வது கேள்வி 'பழமை பொருளாதாரம் பற்றி குறிப்பு வரைக' என கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வி, பாடப்புத்தகத்தில் 10 மதிப்பெண் வினாவாக உள்ளது. 
 
          78 வது  கேள்வியில் 'தேவையும் அளிப்பும்' என்ற பாடத்தில் இருந்து இரண்டு 10 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இது 'புளுபிரிண்ட்' படி இல்லை. 'புளுபிரிண்ட்' படி இது 20 மதிப்பெண் வினாவாக கேட்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.