'டான்செட்' தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை: முதுநிலை பொறியியல், எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம். பி.ஏ., - எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளுக்கான, பொது நுழைவு தேர்வான - 'டான்செட்' தேர்வு, மே மாதம், 16, 17ம் தேதிகளில் நடக்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

* எம்.சி.ஏ.,வுக்கான நுழைவு தேர்வு, 16ம் தேதி காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை.

* எம்.பி.ஏ.,வுக்கான நுழைவு தேர்வு, 16ம் தேதி, பிற்பகல் 2:30 மணி முதல், மாலை 4:30 மணி வரை.

* எம்.இ., - எம்.டெக்.,க்கான நுழைவு தேர்வு, 17ம் தேதி காலை, 10:00 மணி முதல், 12:00 வரை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, 'டான்செட்' தேர்வுக்கு, ஆன்-லைன் மூலமே விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஆன்-லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் பெற்றும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர், ஏப்ரல், 1ம் தேதி முதல், ஆன்-லைனிலும், நேரடியாகவும் விண்ணப்பத்தை பெற்று பதிவு செய்யலாம். விண்ணப்பம் பெற கடைசி தேதி, ஏப்., 20; விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி ஏப்., 22. இத்தகவலை, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு, அண்ணா பல்கலையின், www.annauniv.edu/tancet2015 என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.