எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகள் குறித்து புகார் மற்றும்
கருத்துக்களை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்க காலை 8 மணிமுதல் இரவு
8 மணிவரை 12 மணிநேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என்று அரசு
தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தேர்வுக் கட்டுப்பாட்டு அறை இன்று (வியாழக்கிழமை) முதல் நடைபெறவுள்ள பிளஸ்–2 தேர்வுகள் மற்றும் 19–ந் தேதி முதல் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடர்பாக பொதுமக்கள், மாணவர்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படுமென தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
4 செல்போன் நம்பர்கள் பொதுமக்கள், மாணவர்கள் தங்களது புகார்கள் மற்றும் கருத்துக்களை, அரசுத் தேர்வுகள் துறை கட்டுப்பாட்டு அறையினை கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தெரிவித்து, தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
தேர்வுக் கட்டுப்பாட்டு அறை – தொடர்பு கொள்ள செல்போன் நம்பர்கள் 8012594101, 8012594116, 8012594120, 8012594125
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.