கணிதத்தில் மொத்தமாக மதிப்பெண் அள்ளுவது எப்படி?


கணிதத்தில் மொத்தம் 200 மதிப்பெண்களில் ‘அ’ பிரிவில் ஒரு மதிப்பெண் வினாக்கள் - 40; ‘ஆ’ பிரிவில் ஆறு மதிப்பெண் வினாக்கள் -10; ‘இ’ பிரிவில் 10 மதிப் பெண் வினாக்கள் -10 என வகைப் படுத்தியுள்ளனர்.

கணித பாடப் புத்தகத்தில் Volume 1 மற்றும் Volume 2-ல் உள்ள 271 ஒரு மதிப்பெண் வினாக்களில் இருந்து பொதுத் தேர்வுக்கு 30 வினாக்கள் கேட்கப்படும். மீதி பள்ளிக் கல்வி துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள காம் (com) புத்தகத்தில் இருந்து எட்டு ஒரு மதிப்பெண் வினாக்களும், 2 வினாக் கள் மாணவர்கள் சிந்தித்து விடை யளிக்கும் விதமாக, கணித புத்தகத்தில் இருந்தும் கேட்கப்படும்.
பிளஸ் 2 கணித புத்தகம் பத்து தலைப்பு களை உள்ளடக்கியுள்ளது. இதில் அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் தலைப்பில் 26 மதிப்பெண்களை அள்ள லாம். இதில் ஒரு மதிப்பெண் வினா நான்கும், 6 மதிப்பெண் வினா இரண் டும், 10 மதிப்பெண் வினா ஒன்றும் கேட்கப்படும். பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்ட சமன்பாட்டு தொகுப்பை நேர்மாறு அணி முறையில் தீர்க்க, அணி கோவை முறையை பயன்படுத்தி தீர்க்க, தர முறையை பயன்படுத்தி தீர்வு காண வேண்டும். எ.கா., கேள்வி எண் 1.26; 1.28. பயிற்சி கணக்கு எண் 1.5-ல் இருந்து இரண்டு மற்றும் மூன்றாவது கேள்விகளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெக்டார் இயற்கணிதத்தில் ஒரு மதிப்பெண் ஆறு வினாவும், ஆறு மதிப் பெண் இரண்டு வினாவும், 10 மதிப் பெண் இரண்டு வினா என மொத்தம் 38 மதிப்பெண்களுக்கான கேள்வி கேட்கப்படும். ஆறு மதிப்பெண் கேள்வி களுக்கு பாடப் புத்தகத்தின் பயிற்சி 2.1 முதல் 2.11 வரை பயிற்சி செய்ய வேண்டும். 10 மதிப்பெண் வினாக்களுக்கு, சைன் (ஏ+பி), சைன் (ஏ-பி), காஸ் (ஏ+பி) மற்றும் காஸ் (ஏ-பி) ஆகியவற்றை வெக்டார் முறையில் நிரூபித்தல் கணக்கை பயிற்சி செய்வது அவசியம். முக்கோணத்தின் ஒரு புள்ளி வழியே செல்லும் குத்துக்கோடுகள் குறித்த வினாக்களுக்கு பயிற்சி 2.5 வினாவும், 5 மற்றும் 12 வினாக்களையும் பார்க்க வேண்டும். வெட்டும் புள்ளி காணுதலில் எ.கா., எண் 2.44, 2.7 மற்றும் 3 ஆகிய கேள்விகளையும், தளங்களின் வெக்டர் மற்றும் கார்ட்டீசியன் சமன்பாடு காணுதலில் எ.கா., கேள்வி 2.50, 2.51, 2.52 ஆகியவற்றையும், பயிற்சியில் 2.8 மற்றும் 7 முதல் 14 வினா வரை படித்துக் கொள்ளுங்கள்.
கலப்பு எண்கள் தலைப்பில் நான்கு ஒரு மதிப்பெண், இரண்டு ஆறு மதிப் பெண், ஒரு பத்து மதிப்பெண் என 26 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப் படும். ஆறு மதிப்பெண் வினாக்களுக்கு பயிற்சி 3.4 மற்றும் 2,4,7,9 ஆகிய கேள்வி களை பார்த்தல் அவசியம். எ.கா., பகுதியில் 3.10, 3.19, 3.20 ஒமேகா கணக்குகளையும் படிக்கவும். பத்து மதிப்பெண்களில் பயிற்சி 3.2-ல் 8-வது வினாவும், 3.4 மற்றும் 3.5-ல் பத்து மதிப்பெண் வினாவை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பகுமுறை வடிவ கணிதம் தலைப்பில் நான்கு ஒரு மதிப்பெண் வினாக்களும், ஆறு மதிப்பெண் வினா ஒன்றும், பத்து மதிப்பெண் வினா மூன்று என 40 மதிப்பெண்களுக்கான கேள்வி கேட்கப்படும். 10 மதிப்பெண்கள் பெற்றிட, இந்த பகுதியில் 13-வது செய் முறை கணக்கை நன்றாக பயிற்சி செய்யவும். பயிற்சி கணக்கு 4.4ல் 5 மற்றும் 6-ம் வினாக்களும், பயிற்சி கணக்கில் 4.5-ல் 2-ம் வினா வும், 4.6-ல் மூன்றாம் வினாவும் முக்கியம். பரவளையம், நீள்வட்டம், அதிபர வளையம் ஆகியவற்றின் மையம், குவியம், இயக்குவரை, செவ்வகத்தின் நீளம் காணுதல் ஆகிவற்றை அறிந்து கொண்டால் 3 பத்து மதிப்பெண் வினாக்கள் மூலம் 30 மதிப்பெண்கள் பெறுவது உறுதி.
வகைநுண்கணிதம் தலைப்பில் நான்கு ஒரு மதிப்பெண் வினாவும், 2 ஆறு மதிப்பெண் வினாவும், இரண்டு 10 மதிப்பெண் வினா என 36 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப் படும். ஆறு மதிப்பெண் வினாவுக்கு பயிற்சி 5.1ல் இருந்து 5.11 வரையிலான கேள்விகளையும், 10 மதிப்பெண் வினாக்களுக்கு பயிற்சி எண் 5.1, 5.2 மற்றும் 5.10 மற்றும் எ.கா., பகுதி கணக்குகளை பார்த்துக் கொள்ளவும்.
வகை நுண்கணிதம் தலைப்பில் 2 ஒரு மதிப்பெண் வினாவும், ஒரு ஆறு மதிப்பெண் வினாவும், ஒரு 10 மதிப்பெண் வினா என 18 மதிப்பெண் களுக்கு கேள்விகள் வரும். ஆறு மதிப்பெண் பெற எ.கா., பகுதியில் 6.5, 6.7, 6.15, 6.16, 6.19 கணக்குகளையும், பயிற்சி வினா 6.3-ல் மூன்றில் நான் காவது வினாவையும், நான்கில் 1, 2 ஆகிய வினாக்களையும் படித்துக் கொள்ளுங்கள். 10 மதிப்பெண் பெற்றிட வளைவரை வரைதல், யூலரின் தேற்றத்தின் பயன்பாடு சார்ந்த கணக்கு களை படிக்கவும்.
தொகை நுண்கணிதம் - பயன்பாடுகள் தலைப்பில் 4 ஒரு மதிப்பெண் வினா, 6 மதிப்பெண்ணில் ஒரு வினாவும், 10 மதிப்பெண்ணில் இரண்டு வினா என 30 மதிப்பெண்களுக்கு கேள்வி வரும். ஆறு மதிப்பெண்ணுக்கு பயிற்சி கணக் கில் 7.1 முதல் 7.3 வரையும், எ.கா., கணக்குகளும் அவசியம். 10 மதிப் பெண் பெற பயிற்சி எண் 7.5-ல் உள்ள நான்கு கணக்குகள், எ.கா., கணக்கை படித்துக் கொள்ளவும். பரப்பு, கன அளவு கண்டுபிடிக்கக்கூடிய எ.கா., பயிற்சி கணக்குகளை பார்க்கவும்.
வகைக்கெழுச் சமன்பாடுகள் தலைப் பில் நான்கு ஒரு மதிப்பெண் வினாவும், ஆறு மதிப்பெண்ணில் ஒரு வினாவும், பத்து மதிப்பெண்ணில் இரண்டு வினா என 30 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்படும். ஆறு மதிப்பெண் கேள்விக்கு பயிற்சி எண்: 8.1, 8.2, 8.4 மற்றும் எ.கா., கணக்குகளை படிக்கவும். பத்து மதிப்பெண் பெற பயிற்சி எண்: 8.2, 8.4, 8.6, 8.5 மற்றும் எ.கா., கணக்குகளை பார்க்கவும்.
தனிநிலை கணக்கியல் தலைப்பில் நான்கு ஒரு மதிப்பெண் வினா, ஆறு மதிப்பெண் வினா இரண்டும், பத்து மதிப்பெண்ணில் ஒரு வினா என 26 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்படும். ஆறு மதிப்பெண் பெற்றிட மெய்மை அட்டவணை கணக்கு அனைத்தையும் படிக்க வேண்டும். குலத்திற்கான பண்புகள், கெய்லி அட்டவணை மூலம் குலம், அபிலியன் குலம் காணலாம். பத்து மதிப்பெண்ணில் கெய்லி அட்டவணை மூலம் குலம், அபிலியன் குலம் காணு தல், அணி சார்ந்த கணக்குகள் (ஸ்டார்) வகை கணக்குகளை படிக்கவும்.
நிகழ்தகவுப் பரவுதல் தலைப்பில் நான்கு ஒரு மதிப்பெண் வினாவும், ஆறு மதிப்பெண்ணில் இரண்டு வினா, பத்து மதிப்பெண்ணில் ஒரு வினா என 26 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்படும். இதில் ஆறு மதிப்பெண் பெற, கணிதவியல், எதிர்பார்த்தல், ஈருறுப்பு பரவல், பாய்சன் பரவல் ஆகிய பகுதிகளை சார்ந்த ஆறு மதிப்பெண் வினாவையும், 10.1ல் வினா எண் 4,5,6,9 ஆகிய கணக்கை படிக்கவும். பத்து மதிப்பெண் பெற எ.கா., 10.2, 10.3, 10.30, 10.31 கணக்குகள், பயிற்சி 10.1ல் ஏழாவது கணக்கும், 10.5ல் உள்ள அனைத்தையும் படிக்க வேண்டும்.