சமுதாய கல்லூரி முதல்வர், ஆசிரியர் ஊதியம் உயர்வு யு.ஜி.சி., அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள சமுதாயக் கல்லுாரிகளில் பணியாற்றும், முதல்வர், பொறுப்பு அதிகாரிகள், ஆசிரியர் ஊதியத்தை, பல்கலை மானியக் குழுவான - யு.ஜி.சி., உயர்த்தி உள்ளது. இதுகுறித்து, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சமுதாயக் கல்லுாரிகளின் திருத்தப்பட்ட விதிகளின் படி, முதல்வர்கள், பொறுப்பு அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு படிப்பிற்கும், தனித்தனி ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு மாதந்தோறும், 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, அனைத்து படிப்புகளுக்கும் சேர்த்து, ஒரே ஒரு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.- நமது நிருபர் -