ஆப்பாயிலா?:அதிகாரிகள் எச்சரிக்கை

கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஒருவர் கூறும்போது: கேரளாவில் பறவை காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிட்டது. இங்கு பரவவில்லை.
இருப்பினும் மாதந்தோறும் பறவைகளின் எச்சம், ரத்தம் சேகரித்து ஆய்வுக்கு பெங்களூ ர் அனுப்புகிறோம். பறவை,கோழிகள் இடும் முட்டைகளில் கிருமிகள் இருந்தால், அதை சாப்பிடுவோருக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே வேகாத முட்டை, "ஆப்பாயில்' சாப்பிடுவதை தவிர்ப்பது நன்று, என்றார்.