ரயில்வே பட்ஜெட்: பயணிகள் கட்டணம் உயராது- 'பால் வார்த்த' சுரேஷ் பிரபு

டெல்லி: 2015-16 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு லோக்சபாவில் பகல் 12.10 மணியளவில் தாக்கல் செய்தார். பயணிகளுக்கான ரயில் கட்டணம் உயர்த்தப்படாது என்று கூறி
பயணிகளின் வயிற்றில் பால்வார்த்தார் அமைச்சர் சுரேஷ்பிரபு. தூய்மை, வறுமை ஒழிப்பை இலக்காக கொண்டு ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். ரயில்வே லாபகரமாக செயல்படுவது உறுதி செய்யப்படும் மேலும் ரயில் துறையில் கூடுதல் முதலீடு வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும் எனவும் அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். ரயில்வே வேகத்தை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் மேலும் நெரிசல் மிக்க தடத்தில் கூடுதல் ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரயில்கள் சரியான நேரத்துக்கு செல்வது உறுதி செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.