பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு: தொழில்நுட்ப கல்வித்துறை முடிவு

சென்னை: தொழில் நுட்ப கல்வித்துறை, ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதம் நடத்தும், வாரிய பட்டயத் தேர்வுகளில், கருணை அடிப்படையில், பழைய மாணவர்களுக்கு தேர்வு எழுத, வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, 2007 வரை, மூன்று ஆண்டு பட்டயப்படிப்பில் சேர்ந்தவர்களும், 2006 வரை, நான்கு ஆண்டு பகுதி நேர பட்டயப்படிப்பில் சேர்ந்தவர்களும், தேர்வு எழுதலாம். இத்திட்டத்தின்படி தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும், தேர்வுக் கட்டணம், 500; மதிப்பெண் பட்டியல் கட்டணம், 30; பதிவுக் கட்டணம், 25 ரூபாயை, தாங்கள் படித்த கல்லூரி முதல்வரிடம் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். அபராதம் இல்லாமல் கட்டணம் செலுத்த, பிப்., 17ம் தேதி கடைசி நாள்.