பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.42 குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.25 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை
குறைப்பு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் இந்தியாவில் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ரூபாய் 60க்கு கீழ் பெட்ரோல் விலை குறைகிறது.