சட்டசபை கூட்டம்: ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை: சட்டசபை கூட்டத்தொடருக்காக, சட்டசபை அரங்கை தயார் செய்யும் பணி துவங்கியது. தமிழக சட்டசபையின், நடப்பு ஆண்டின், முதல் கூட்டத்தொடர், வரும், 17ம் தேதி துவங்குகிறது. காலை 10:45 மணிக்கு,
சட்டசபையில் கவர்னர் ரோசய்யா உரையாற்றுகிறார். அன்று மாலை, எத்தனை நாள் சட்டசபை நடத்துவது என்பதை, அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும். இதற்காக, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்ட சபை அரங்கை, தயார் செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. அரங்கை சுத்தப்படுத்தி, கவர்னர் வரும் வழியில், சிவப்பு கம்பளம் விரிக்கும் பணி, நேற்று நடந்தது.