போக்குவரத்து தொழிலாளருக்கு போராட்ட நாள் சம்பளம் 'கட்'

கடந்த மாதம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் நடத்திய நான்கு நாட்களுக்கான சம்பளத்தை அரசு பிடித்தம் செய்துள்ளது.
 
          அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் 12 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தமிழக அரசு இதுவரை துவக்கவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் டிச.28 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இது வரை அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு கடந்த மாத சம்பளம் வழங்கப்பட்டது. இதில் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நான்கு நாள் சம்பளம் 'கட்' செய்யப்பட்டுள்ளது.