நிலுவைத் தொகை எதிர்பார்க்கும் பகுதி நேர ஆசிரியர்கள்

    பகுதி நேர ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு நிலுவைத்தொகை வழங்கப்படாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

               2011-12ல் 16 ஆயிரத்து 549 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. வாரத்தில் மூன்று நாள், நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் பணி. இவர்களுக்கு 2014 ஏப்ரல் முதல் ரூ.7 ஆயிரம் சம்பளம் உயர்த்தி அக்டோபரில் அரசாணை வெளியிடப்பட்டது. முந்தைய மாதங்களுக்குரிய தொகை நிலுவையாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. டிசம்பர் மாதத்துக்கு பிறகு ரூ.7 ஆயிரம் சம்பளம் பெற்று வருகின்றனர். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை உள்ள, நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.
பகுதி நேர சிறப்பாசிரியர் சங்க சிவகங்கை மாவட்ட தலைவர் குமரேசன் கூறும்போது: கடந்த ஆண்டு சம்பளம் உயர்த்தி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்தது. நிலுவை தொகை உடனடியாக வழங்கப்படும் என அறிவித்தனர். இதுவரை வழங்கவில்லை. சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பிறகு பள்ளிகளில் விளையாட்டு திறன், இசை திறன், ஓவியத்திறன் வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்றார்.