இந்திய வன அலுவலர் பணி தேர்வு; சைதை துரைசாமியின் ‘மனித நேயம்’ மையத்தில் படித்த 8 பேர் தேர்வு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய அகில இந்திய வன அலுவலர் பணிக்கான தேர்வில் சைதை துரைசாமியின் ‘மனித நேயம்’ மையத்தில் படித்த 8 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளில்...

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, ‘மனித நேயம்’ மையம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் என்ற பெயரில் ஒரு பயிற்சி மையம் நடத்துகிறார். இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய பணிகளுக்கான தேர்வுகளுக்கும், மத்திய-மாநில அரசில் பணிபுரிவதற்கான தேர்வுகளுக்கும் இலவசமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 7 ஆண்டுகளில் இந்த மையத்தில் அளிக்கப்பட்ட பயிற்சிகளின் மூலமாக இதுவரை 2,235 பேர் தமிழக மற்றும் மத்திய அரசு பணிகளில் உள்ளனர்.

8 பேர் தேர்வு

2014-15-ம் ஆண்டிற்கான இந்திய வன அலுவலர் பணிக்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேர்முக தேர்வில் ‘மனித நேயம்’ மையத்தில் பயிற்சி பெற்ற விக்ரந்த் ராஜா, விஜயபாஸ்கர் ரெட்டி, தேன்மொழி, ருத்ரன், மாதவராஜ், எம்.வி.ஜே.கண்ணன், எஸ்.ஹாரீஸ், என்.கணேஷ், ஆகிய 8 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

தேர்வான அனைவருக்கும் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்தா