'டிஜிட்டல் இந்தியா' திட்டம்: 5 கோடி பேருக்கு வேலை!!!

''டிஜிட்டல் இந்தியா திட்டம் முலம் நாட்டில் 5 கோடி பேருக்கு வேலை  வாய்ப்பு கிடைக்கும்,'' என மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

அவர், தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மேலும் கூறியதாவது:
தகவல் தொழில்நுட்பத் துறை 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது. அறிவுசார் பொருளாதார நாடாக மாற்றும் நோக்கில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன. மக்கள் மிகச் சுலபமாக தொழில்நுட்ப அடிப்படை கட்டமைப்பு மற்றும் அரசு சேவைகளை பெற வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம். குக்கிராமங்களிலும் கணினி, தொலைதொடர்பு வசதிகள் கிடைக்கும் பட்சத்தில் வேலை வாய்ப்புகள் பெருகும். இந்தியாவில் முதலீடு செய்ய நான்காயிரம் பேர் முன்வந்துள்ளனர். அவர்களில் அமெரிக்கா வின் தகவல் தொழில்நுட்ப நகரமான சிலிக்கான் வேலியை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் உருவாக்கும் செயல்திட்டங்களால் வெளிநாட்டு நிறுவனங்கள் கொழிக்கின்றன. அவர்கள் பேஸ்புக், கூகுள் போன்ற கண்டுபிடிப்புகளை இந்தியாவில் உருவாக்க துணை புரிவார்கள். இவ்வாறு, அவர் கூறினார்.