முன்பதிவு செய்யலையா?: ஐந்தே 5 நிமிடங்களில் ரயில் டிக்கெட் வாங்க 'ஆபரேஷன் 5 நிமிடம்'

முன்பதிவு செய்யாமல் பயணிப்போர் 5 நிமிடங்களில் டிக்கெட் வாங்க ஆபரேஷன் 5 நிமிடம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தி வைக்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள முதல் ரயில்வே பட்ஜெட் இது. இந்த பட்ஜெட்டில் பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தபட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் டீசல் விலை குறைந்துள்ளதால் பயணிகள் ரயில் கட்டணம் குறைக்கப்படும் என்று எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இன்றைய பட்ஜெட்டில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் ஆபரேஷன் 5 நிமிடம் என்ற திட்டம் துவங்கி வைக்கப்படும் என்று பிரபு அறிவித்துள்ளார். அதாவது முன்பதிவு செய்யாமல் பயணம் செய்வோர் 5 நிமிடங்களில் டிக்கெட் பெற வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது. இதற்கு தான் ஆபரேஷன் ஆபரேஷன் 5 நிமிடம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்கும் முறையை ரயில்வே அமைச்சகம் எளிமையாக்குகிறது. ஸ்மார்ட் போன்கள், டெபிட் கார்டுகள் மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.