பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ3.18, டீசல் ரூ3.09 அதிரடியாக உயர்வு!

டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ3.18க்கு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ3.09 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் மாதத்துக்கு இருமுறை பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ3.18, டீசல் ரூ3.09 அதிரடியாக உயர்வு! கடந்த 15-ந் தேதி பெட்ரோல் விலை 82 காசுகளும், டீசல் விலை 61 காசுகளும் உயர்த்தப்பட்டன. இந்நிலையில் இன்று அதிரடியாக பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ3.18, டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ3.09 என்கிற அளவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்துள்ளன. இதனால் சென்னையில் ரூ.59.85-க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரிகள் உட்பட ரூ63.92க்கு இனி விற்பனை செய்யப்படும். அதேபோல் ஒரு லிட்டர் டீசல் இனி ரூ53.53 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும். நடாளுமன்றத்தில் மத்திய பொதுபட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்றுதான் தாக்கல் செய்திருந்தார். ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கான பட்ஜெட்டாக இது அமைந்திருந்தது என்ற பொது கருத்து வெளியாகி உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.