பி.எட். படிப்பை 2 ஆண்டுகளாக அதிகரிக்க ஆசிரியர் கல்விக் கவுன்சிலிடம் தமிழக அரசு கால அவகாசம் கோரியுள்ளது.

பி.எட். படிப்பை 2 ஆண்டுகளாக அதிகரிக்க ஆசிரியர் கல்விக் கவுன்சிலிடம் தமிழக அரசு கால அவகாசம் கோரியுள்ளது சென்னை சட்டப்பேரவையில் உறுப்பினர் களின் கேள்விகளுக்கு பதிலளித்து உயர் கல்வித் துறை அமைச்சர் 
பழனியப்பன் கூறியதாவது: தமிழகத்தில் அரசு சார்பில் 7, அரசு உதவி பெறும் கல்லூரிகள் 14, சுயநிதி கல்லூரிகள் 668 என மொத்தம் 689 கல்வியியல் கல்லூரிகள் செயல் பட்டு வருகின்றன. நாட்டிலேயே அதிகமான கல்வியியல் கல்லூரிகள் செயல்படும் மாநிலம் தமிழகம்தான். கும்பகோணத்தில் தற்போது புதி தாக கல்வியியல் கல்லூரி தொடங்கு வதற்கான வாய்ப்பு இல்லை. நாடு முழுவதும் பி.எட். படிப்புக் கான காலத்தை ஓராண்டில் இருந்து 2 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. வரும் 2015-16ம் கல்வியாண்டிலேயே இதை அமல்படுத்த வேண்டும் என்றும் கவுன்சில் கூறியுள்ளது. எனினும் பி.எட். படிப்புக் காலத்தை 2 ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டுமானால் அதற்கேற்ற வகையில் கல் லூரிகளுக்கான கட்டமைப்பு வசதி களை மேம்படுத்துவது உட்பட பல பணிகளை செய்ய வேண்டியுள்ளது. இந்தப் பணிகளை எல்லாம் செய்து முடிப்பதற்கு அவகாசம் தேவைப்படு கிறது. ஆகவே, பி.எட். படிப்பு காலத்தை 2 ஆண்டுகளாக அதிகரிப்பதை வரும் கல்வியாண்டிலேயே அமல்படுத்துவதற்கு பதிலாக மேலும் அவகாசம் தரவேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் ஆசிரியர் கல்விக் கவுன்சிலிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தனியார் கல்வியியல் கல்லூரிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து இந்த விவகாரத்தில் தமி ழக அரசு உரிய முடிவை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.