பிளஸ்-2 வினாத்தாள் இன்று அனுப்பப்படுகிறது

            பிளஸ்-2 வினாத்தாள்கள் சென்னையில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு தேர்வுத்துறை சார்பில் அனுப்பப்படுகிறது.

           இதையொட்டி அந்த வினாத்தாள் கட்டுகளை பத்திரமாக வைக்க டி.பி.ஐ.வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அனைத்து இயக்குனர்களும், அனைத்து இணை இயக்குனர்களும் மாவட்டங்களுக்கு பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று முதல் 4 நாட்களுக்கு அந்த பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் பிளஸ்-2 தேர்வு தொடர்பாக எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தலைமையில் கூட்டம் நடந்தது.

இதையொட்டி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் வினாத்தாள் கட்டுகளை பத்திரமாக வைக்கவும், அந்த மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடவும் ஏற்பாடு செய்வார்கள். பின்னர் அவர்கள் தேர்வு நடைபெற உள்ள மையங்களை ஆய்வு செய்வார்கள். தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் அனைத்தையும் மேற்கொள்ள உள்ளனர்.

இவர்கள் அனைவரும் சென்னை வந்த பின்னர் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் வினாத்தாள் மையங்களை கண்காணிப்பார்கள்.