பிளஸ் 2 செய்முறை தேர்வு: 6 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை:பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வு நேற்று துவங்கியது. தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, அடுத்த மாதம் 5ம் தேதி துவங்குகிறது. இந்த ஆண்டு இத்தேர்வை,
தனித்தேர்வர்களையும் சேர்த்து, 10 லட்சம் பேர் எழுதுவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான, இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் தொடர்பான செய்முறைத் தேர்வு, நேற்று துவங்கியது. இதில், தமிழகம் முழுவதும், ஆறு லட்சம் மாணவர் பங்கேற்கின்றனர். சென்னையில், 229 மையங்கள் உட்பட மாநிலம் முழுவதும், 3,000 மையங்களில் செய்முறைத் தேர்வு நடக்கிறது. இதற்கு, தேர்வுத் துறை சார்பில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
முன்னதாக, அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற தனித்தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கும், தற்போது செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது.