பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், தேர்வு முடிவு வெளியான 2 நாட்களில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், தேர்வு முடிவு வெளியான 2 நாட்களில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 10 நாட்களில் மதிப்பெண் சான்று வழங்குவது என சென்னையில் நடைபெற்ற பள்ளிகல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்காலிக மதிப்பெண் சான்று 3 மாதம் வரை செல்லுபடியாகும்.மறு மதீப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தால்,ஒரு மணி நேரம் முதல் 12 மணி நேரத்தில் விடைத்தா்ள் நகல் கிடைக்கும் எனவும் முடிவு எடுக்கப்பட்டு்ள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், தேர்வு முடிவு வெளியான 2 நாட்களில் தற்காலிக மதிப்பெண் சான்றினை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் கூறியுள்ளார். சென்னையில் இன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் கிடைக்க காலதாமதம் ஆவதால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பிளஸ் 2 மதிப்பெண் சான்று 10 நாட்களில் கிடைக்கும் என்றும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மறு மதீப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தால், உடனே விடைத்தாள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பித்த ஒரு மணி நேரம் முதல் 12 மணி நேரத்தில் விடைத்தா்ள் நகல் கிடைக்கும். இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டு்ள்ளது.