குரூப் - 1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள், சான்றிதழ்களின்
நகல்களை அனுப்பி வைக்கும்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
குரூப் - 1 பிரிவில், 79 பதவி களுக்கான முதல் நிலை தேர்வை, 2014 ஜூலை, 20ம்
தேதி, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்ற, 4,389
பேருக்கும், தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டிய சான்றிதழ் விவரம்,
தேர்வுக்கட்டணம் குறித்த குறிப்பாணை, விரைவு தபால் மூலம், அனுப்பப்பட்டு
உள்ளது. அந்த குறிப்பாணை, தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற
இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள், தங்கள் தேர்வு
பதிவு எண்ணை பதிவு செய்து, குறிப்பாணை மற்றும் அதன் இணைப்புகளை
பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பாணையில் கேட்கப்பட்டு உள்ள சான்று இடப்பட்ட
சான்றிதழ்களின் நகலை, பிப்., 17 அல்லது அதற்கு முன், தேர்வாணைய
அலுவலகத்திற்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.