16 வருடங்களுக்கு பிறகு நிகழ இருக்கும் அபூர்வ சூரிய கிரகணம்

16 வருடங்களுக்கு பிறகு நிகழ இருக்கும் அபூர்வ சூரிய கிரகணம் - லண்டன் நகரம் இருளில் மூழ்கும் அபாயம்

 மிகவும் அபூர்வமான ஒரு சூரிய கிரகணம் வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள். இதுபோன்ற சூரிய கிரகணம் ஒன்று 1999ம் ஆண்டே இறுதியாக நடந்துள்ளது. 16 வரு
டங்கள் கழித்து அது தற்போது நிகழவுள்ளது. வரும் மார்ச் மாதம் 20ம் திகதி பகல் வேளையை இரவு கவ்வவுள்ளது. இது சிலவேளை 90 நிமிடங்கள் நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐரோப்பாவை பொறுத்தவரை சுமார் 84 சதவீதமான சூரிய ஒளி மறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.மேலும் வடக்கு நோர்வே மற்றும் பரோயே தீவுகளில் முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. மீண்டும் இதுபோன்ற ஒரு சூரிய கிரகணம் 2026ம் ஆண்டில் தான் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.