150 தமிழ் நூல்கள் இன்று வெளியீடு

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 150 அரிய தமிழ் நூல்கள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளன.
 
           இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:  அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், "வர்ம பீரங்கி', "பெண்ணியம்', "அயலகத் தமிழ்ப் பணிகள்' ஆகியவை உள்பட தமிழர்களின் பண்டைய கலை, இலக்கியம் போன்றவற்றை விவரிக்கும் 150-க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் வெளியிடப்படவுள்ளன.  இந்த நூல்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிடுகிறார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி-செய்தித் துறைச் செயலர் மூ.இராசாராம், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கா.மு.சேகர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன், தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் உடையார் கோயில் குணா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.