ரயில் பயணத்திற்கு இனி 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம்!

டெல்லி: ரயில்களில் டிக்கெட் முன்பதிவை இனிமேல் 120 நாட்களுக்கு முன்பே செய்யலாம் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். லோக்சபாவில் 2015-2016 நிதியாண்டிற்காக ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் இதனை அறிவித்தார். ரயில்களில் வெளியூர் செல்வோர் இப்போது 60 நாட்களுக்கு முன் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஆனால், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இனி 60 நாட்களுக்கு பதிலாக 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.