பத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்
தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று
தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9ம் தேதி
தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிகின்றன. இந்த தேர்வில் தனித்தேர்வர்களாக
தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் இன்று முதல்
www.tndge.in என்ற இணைய தளத்தில் இருந்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட இணைய தளத்தில் ‘‘SSLC EXAM MARCH 2015 PRIVATE CANDIDATE HALL
TICKET PRINTOUT என கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப
எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தால் ஹால்டிக்கெட் திரையில்
தோன்றும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தங்களுக்கான அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) வியாழக்கிழமை (பிப்ரவரி19) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தங்களுக்கான அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) வியாழக்கிழமை (பிப்ரவரி19) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம்.
அந்த இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் தனித் தேர்வர்களுக்கான ஹால்
டிக்கெட் என்ற பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு, தனித்
தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதியைப் பதிவு செய்தால் ஹால்
டிக்கெட் திரையில் தோன்றும். அதைத் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.