மருத்துவ ஆலோசனை பெற தகவல் மையம் தமிழக அரசின் டெலிபோன் எண்கள்

ப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென, தனியாக சிறப்பு வார்டுகள் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை, அனைத்து மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நோய்க்கு தேவையான சிகிச்சை அளிக்க, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனரகத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சல்கள் குறித்து 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனைகள் பெறும் வகையில் தகவல் மையம் (தொலைபேசி எண்.044 24350496, 044 24334811, 94443 40496 மற்றும் 93614 82899) ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் பெற 104 சேவையையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தடுக்கும் வழிகள்
பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க சில சுகாதாரமான வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். இருமும் பொழுதும், தும்மும் பொழுதும் கைகுட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை நன்றாக தேய்த்து கழுவவேண்டும். குறிப்பாக வீட்டிலிருந்து பணியிடம் மற்றும் வெளியிடங்களுக்கு சென்றவுடன் ஒரு முறை கைகளை நன்றாக கழுவவேண்டும். மீண்டும் வீடு திரும்பியவுடன் ஒருமுறை கைகளை கழுவவேண்டும்.
காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சுயமாக மருந்துகளை உட்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் மருந்து கடைகளில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்வதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
பீதி வேண்டாம்
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் பீதியடையவேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.