உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

பள்ளி உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மூன்று புத்தாக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
தற்போது பள்ளிகளில் தேக்வாண்டோ, குத்துச் சண்டை, வாள் சண்
டை, ஜிம்னாஸ்டிக், ஜுடோ, சிலம்பம் போன்ற விளையாட்டுகள் கற்றுத்தரப்படுகின்றன.
இந்த விளையாட்டுகள் தொடர்பாக மதுரை மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் இப் பயிற்சியை
முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தொடங்கி வைத்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.முருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பரமேஸ்வரி மேற்பார்வையில் மதுரை மாவட்ட தேக்வாண்டோ சங்க செயலர் கே.நாகராஜ் உள்ளிட்டோர் இப் பயிற்சியை அளித்தனர். சனிக்கிழமை வரை இப் பயிற்சி நடைபெறும்