ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கப் பேரவைக் கூட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் சரக ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்க பேரவைக் கூட்டம் நடந்தது.விருத்தாசலம் தென்கோட்டை வீதி
நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் புவிஅரசு தலைமை தாங்கினார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மன்னர் மன்னன், (கூடுதல்) தமிழ்மணி முன்னிலை வகித்தனர். இயக்குனர் பெரியநாயகி வரவேற்றார். சங்க துணைத் தலைவர் சகாய தேவதாஸ், இயக்குனர்கள் பழனிவேல், பிரபாகர் உட்பட பலர் பங்கேற்றனர். அதில், 2013 - 14ம் ஆண்டிற்கான வரவு, செலவு அறிக்கை ஏற்கப்பட்டு, பங்கு ஈவுத்தொகை, இனிப்பு வழங்கப்பட்டது. செயலர் ஆனந்தி நன்றி கூறினார்.