"ஆசிரியர் தகுதித் தேர்வு, வங்கி பணிக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம்'

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் வங்கி பணிக்கு விண்ணப்பித்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் து. நாகேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய கல்வி வாரிய ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் பணிக்கான தேர்வு ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்துள்ள
விண்ணப்பதாரர்கள் தேர்வில் வெற்றி பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே, இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ள விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது