நாடு முழுவதும் ஒரே கல்விக் கொள்கை : மத்திய அமைச்சர் தகவல்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் உலகமயமாக்கப்பட்ட உயர்கல்வி மற்றும் அதன் தரஉறுதிக்கான சவால்கள் என்ற தலைப்பிலான 2 நாள் சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது.  சிறப்பு விருந்தினராக கலந்து
கொண்ட மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.  
          அப்போது பேசிய மத்திய அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான கல்வி முறை தேவை. ஒரே மாதிரியான கல்விக்கொள்கையை பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவரும். கல்வியை பொறுத்தவரை நாட்டில் 6 லட்சம் கிராமங்களில் தரமான தொடக்கக்கல்வியை உறுதி செய்வதில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.