தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் எழுத்தர், பாதுகாவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான ஆண்கள் மட்டும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.

     இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக, மாவட்ட மேலாளரால் மேற்குறிப்பிட்ட பணிகாலியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டு, அதற்கான பதிவு மூப்பு விவரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 1.7.2014 அன்றைய நாளில் ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் ஆகியோர் 18 வயது முதல் 32 வயதிற்குள்ளும், பொது பிரிவினர் 18 வயது முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

     பாதுகாவலர் பணியிடம்: இப்பணிக்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான பதிவு மூப்பு கலப்பு திருமணம் புரிந்த முன்னுரிமையுடையோர் மட்டும் ஆதிதிராவிடர்-9.6.2006, மிகவும் பிற்பட்ட வகுப்பினர்-11.9.2013, பிற்பட்ட வகுப்பினர்-21.3.2013 வரையும். முன்னுரிமையற்றவர்கள் ஆதிதிராவிடர்-30.12.1991, மிகவும் பிற்பட்ட வகுப்பினர்-12.7.1995, பிற்பட்ட வகுப்பினர்-26.12.1995 வரையும் இருக்க வேண்டும்.


      உதவியாளர் பணியிடம்: இப்பணியிடத்திற்கு பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளியிறுதி வகுப்புக்கு மேல், மேல்நிலை தேர்ச்சி பெற்று பதிவு செய்திருந்தால் வயது வரம்பு சலுகை உண்டு. கலப்பு திருமணம் புரிந்த முன்னுரிமையுடையோர் மட்டும். ஆதிதிராவிடர் அருந்ததியினர்-26.8.2009,  ஆதிதிராவிடர்-4.6.1996, மிகவும் பிற்பட்ட வகுப்பினர்-21.6.2005, பிற்பட்ட வகுப்பினர்-29.6.1998 வரையும். முன்னுரியற்றவர்கள் ஆதிதிராவிடர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு-24.6.1982 வரையிலும் பதிவு செய்திருக்க வேண்டும்.

     எழுத்தர் பணியிடம்: இப்பணிக்கு தாவரவியல், விலங்கியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளியிறுதி வகுப்புக்கு மேல், மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பதிவு செய்திருந்தால் வயது வரம்பில் சலுகை உண்டு. கலப்பு திருமணம் புரிந்த முன்னுரிமையுடையவர்கள் மட்டும், ஆதிதிராவிடர் அருந்ததியினர் மற்றும் ஆதிதிராவிடர் ஆகியோருக்கு 24.7.2007, மிகவும் பிற்பட்ட வகுப்பினர்-10.10.2007, பிற்பட்ட வகுப்பினர்-26.7.2013 வரையும். முன்னிரிமையற்றவர்கள் ஆதிதிராவிடர்-30.6.1989, மிகவும் பிற்பட்ட வகுப்பினர்-19.4.1989, பிற்பட்ட வகுப்பினர்-10.9.1987 வரையிலும் இருக்க வேண்டும்.

     எனவே தகுதியுடைய பதிவுதாரர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அசல் கல்விச் சான்றுகளுடன் வரும் 23-ம் தேதி சூலக்கரையில் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து பதிவு மூப்பு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகின்றவர்களின் கோரிக்கை எக்காரணம் கொண்டு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.