உலகிலேயே அதிக விடுமுறை தினங்கள் கொண்ட நாடு இந்தியா!

பொதுவாக வளர்ந்து வரும் நாடுகளில் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் விடுமுறை தினங்கள் மற்ற நாடுகளை காட்டிலும் குறைவாக உள்ளதாக நினைப்பதுண்டு. ஆனால், உண்மையில் காலண்டரை வைத்து பார்க்கும் போது உலகிலேயே அதிக பொது விடுமுறை தினங்களை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது. 

ஓர் ஆண்டுக்கு 21 நாட்களை பொது விடுமுறை தினங்களாக கொண்டுள்ள இந்தியா, ஒவ்வொரு மாநிலங்களிலும் கொண்டாடப்படும் பண்டிகைகளை கொண்டு கணக்கிட்டால் இன்னும் அதிகமாக கூட வரலாம். பிரபல ஆன்லைன் டிராவல் வெப்ஸைட் வீகோ நடத்திய ஆய்வில், பிலிப்பைன்ஸ், சீனா, ஹாங் காங், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் நாடுகளை காட்டிலும் இந்தியா அதிக விடுமுறைகளை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உலக நாடுகளின் விடுமுறை தின பட்டியல் பின்வருமாறு:- 

இந்தியா - 21
பிலிப்பைன்ஸ் - 18
சீனா, ஹாங்காங் -17
தாய்லாந்து -16
மலேசியா, வியட்நாம் - 15
இந்தோனேசியா- 14
தைவான், தென்கொரியா-13
சிங்கப்பூர்-11
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து-10
செர்பியா, ஜெர்மனி-9
பிரிட்டன், ஸ்பெயின்-8
மெக்ஸிகோ-7