அஞ்சலக உதவியாளர் தேர்வு: முடிவு இழுபறி

அஞ்சலக உதவியாளர் பணியிட தேர்வு, இறுதி முடிவு வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டு உள்ளது; தேர்வு எழுதி யோர் பரிதவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், 1,179 அஞ்சலக உதவியாளர் பணியிடங்களுக்கு, முதற் கட்ட தேர்வை, அஞ்சல் துறை, கடந்தாண்டு மே 11ல் நடத்தியது. தேர்வில், 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், 3,700 பேரை தேர்வு செய்து, கடந்த செப்டம்பரில், கம்ப்யூட்டர் திறன் தேர்வு (தட்டச்சு) நடத்தப்பட்டது. முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. மண்டல தபால் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தும் பொறுப்பு, தனியார் ஏஜென்சியிடம் விடப்பட்டுள்ளது. தேர்வு முடிவை, சென்னை தலைமை அலுவலகத்தில், அந்த ஏஜென்சி கொடுத்து விடும். தலைமை அலுவலகம் தான், தேர்வு முடிவு களை அறிவிக்க வேண்டும்' என்றனர்.
- நமது நிருபர் -