பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கை; தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம்

பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார்.

பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுரை வழங்கி உள்ளார். அந்த கடிதம் விவரம் வருமாறு:-

பள்ளிகள் சுத்தம்

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தங்களது பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு, தண்ணீர் தேங்கியிருக்கும் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து சுற்றப்புறம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலரால் கள ஆய்வு மேற்கொண்டு பிப்ரவரி 6-ந்தேதிக்குள் பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கவேண்டும்.

தொடர் காய்ச்சல்

மாணவ-மாணவிகள் தொடர்ந்து காய்ச்சலில் இருந்தாலோ அல்லது இது போன்ற கிருமிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலோ உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்தையோ அல்லது அரசு மருத்துவமனையையோ தொடர்பு கொண்டு சிகிச்சை பெறுதல் வேண்டும்.

இது குறித்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் விழிப்புடன் செயல்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படின் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட சுகாதார ஆய்வு அலுவலருடன் தொடர்பு கொண்டு உடனடி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடல் வேண்டும். இது போன்ற நோய்கிருமிகள் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்தல் அவசியம் என்பதை வலியுறுத்தல் வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய அறிவுரைகள்

தண்ணீர் தேங்குவதாலும் சுகாதாரமற்ற குடிநீரை உபயோகப்படுத்துவதாலும் ஏற்படக்கூடிய டெங்கு பிற வைரஸ் காய்ச்சல், மஞ்சள்காமாலை போன்ற நோய்களின் தாக்குதலை தவிர்க்க பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்.

1. அனைத்து பள்ளி வளாகத்திலும் எந்த இடத்திலும் நீர்தேங்காதவாறும், நீர்த்தேக்கப் பள்ளங்கள் இல்லாதவாறும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி, கழிவு நீர் தொட்டிகள் அனைத்தும் திறந்த நிலையில் இல்லாதவாறு அவற்றை மூடி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கால்வாய்

2. பள்ளி வளாகத்தினுள் உள்ள கழிவறைகளை அவ்வப்போது சுத்தம் செய்து மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படவேண்டும்.

4. குடிநீர் குழாய்களை மாணவர்கள் பயன்படுத்துவதன் மூலம் வெளிப்படும் உபரி நீர் தேங்காதவாறு கால்வாய்கள் அமைத்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

டெங்கு குறித்து விழிப்புணர்வு

5. அவ்வப்போது வகுப்பாசிரியர்கள் மூலம் டெங்கு குறித்தான விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.

6. கொசுக்கள் மூலம் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா மற்றும் பிற வைரஸ் காய்ச்சல்கள் பரவுவது குறித்தும், இவற்றிலிருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வை மாணவ - மாணவிகளிடம் ஏற்படுத்தவேண்டும். இறைவணக்கத்தின்போதும், வகுப்புகளிலும் மாணவர்களுக்கு இதுகுறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.

7. பள்ளி வளாகங்களில் உள்ளரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.

8. பள்ளி வளாகத்திற்கு அருகாமையில் (வெளிப்பகுதியில்) சிறு பள்ளங்கள், பயன்படுத்தப்படாத கிணறுகள் இருப்பின் அவற்றில் நீர் தேங்குவதன் மூலம் அவற்றிலிருந்து நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. எனவே, அவ்விடங்களை பற்றிய விவரங்கள் அருகாமையில் உள்ள சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு தெரிவித்து அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டும்.

மஞ்சள்காமாலை

9. டெங்கு காய்ச்சல் தவிர மஞ்சள் காமாலை மற்றும் சுகாதாரமற்ற குடிநீரினால் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

10. பள்ளிகளில் சுகாதாரம் குறித்தும், தொற்றுநோய்கள் குறித்தும் பலகைகள் மற்றும் பதாகைகள் வைத்திடுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் வேண்டும்.

11. நோய் தடுப்பு நடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி நோய்க்கான அறிகுறி தெரிந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை செய்து கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்துதல் வேண்டும்.

இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.